News March 27, 2024
ஒரே ஓவரில் 20 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்து வரும் SRH அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 20 ரன்களை குவித்தார். SRH அணி இதுவரை 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் யார் வெல்லுவாங்க? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 6, 2025
புலனாய்வுத்துறையில் 258 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய அரசின் புலனாய்வுத்துறையில் 258 காலிப்பணியிடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று, 2023 முதல் 2025 வரை கேட் தேர்வில் தகுதி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 6, 2025
WPL: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் லிஸ்ட்

மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நிலையில், தற்போது ஒட்டுமொத்த கவனமும் பிரீமியர் லீக் மீது திரும்பியுள்ளது. 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன்களாக உருவெடுத்துள்ளன. அடுத்த சீசனுக்கான ஏலம் இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீராங்கனைகளின் பட்டியலை EPSN தளம் வெளியிட்டுள்ளது. முழு விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.
News November 6, 2025
நவம்பர் 6: வரலாற்றில் இன்று

*1913–தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதானார். *1926–புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் பிறந்தநாள். *1937–அரசியல்வாதி யஷ்வந்த் சின்ஹா பிறந்தநாள். *1940–பாடகி சூலமங்கலம் ராஜலட்சுமி பிறந்தநாள். *1983–நடிகை நீலிமா ராணி பிறந்தநாள். *1983–நடிகர் பாபி சிம்ஹா பிறந்தநாள். *1987–டென்னிஸ் வீராங்கனை ஆனா இவனோவிச் பிறந்தநாள்.


