News April 20, 2025
நாயகன் சூரிக்கு குவியும் பாராட்டு.. நெகிழ்ச்சியில் பதிவு

காமெடியனாக வலம் வந்த சூரி தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் ‘மாமன்’ படம் மே 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே அவரது அடுத்த படமான மண்டாடியின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சூரி நன்றி தெரிவித்து X-ல் பதிவிட்டுள்ளார். அதில் விருப்பத்தை வெற்றிக்குச் சேர்க்கும் பாலம், முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு என சூரி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 18, 2025
ராக்கெட் வேகத்தில் உச்சம்.. விலை மொத்தம் ₹14,000 உயர்வு

தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹224-க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹2,24,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹14,000 அதிகரித்துள்ளது.
News December 18, 2025
அஸ்வின் Vs CSK ரசிகர்கள்.. வெடித்தது மோதல்

SM-ல் கடந்த சில நாள்களாக அஸ்வினுக்கும், CSK ரசிகர்களுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. ஏலத்தில் யாரையெல்லாம் CSK வாங்கும் என்ற தகவலை கசியவிட்டு, வேண்டுமென்றே விலையை ஏற்றிவிட்டதாக ரசிகர்கள் சாடினர். தற்போது யூடியூப்பிலும், CSK-வின் வீரர்கள் தேர்வை அஷ்வின் மறைமுகமாக விமர்சித்தார். CSK மீது எதற்காக வன்மம் பரப்புகிறீர்கள் என்ற கேள்விக்கும், அஸ்வின் Haha Smiley பதிவிட்டதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
News December 18, 2025
தவறாக பயன்படுத்தப்படும் AI.. என்னதான் தீர்வு?

AI டெக்னாலஜியை பயன்படுத்தி, தொடர்ந்து சோஷியல் மீடியாவில் நடிகைகள் குறித்து மிகவும் மோசமான வகையில் போட்டோக்கள் பகிரப்படுகின்றன. நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நிவேதா தாமஸ் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். டெக்னாலஜியின் வளர்ச்சியால், இப்படியான பதிவுகள் வருங்காலத்தில் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் சூழலில், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?


