News May 25, 2024

அரசியலில் கணக்குகள் சரியாக அமையாது: கார்கே

image

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் INDIA கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என சொல்ல முடியாது எனக் கூறிய அவர், அரசியலில் அதுபோன்ற கணக்குகள் சரியாக அமையாது என்றார். அத்துடன், அனைத்து மாநிலங்களிலும் பாஜக தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது எனத் தெரிவித்தார்.

Similar News

News March 9, 2026

திருவாரூர் வழியாக புதிய பயணிகள் ரயில் சேவை!

image

காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவை வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்குடியில் காலை 6:15க்கு புறப்பட்டு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் வழியாக மயிலாடுதுறையை 10:40க்கு சென்றடையும், மறுமார்க்கத்தில் மாலை 5:10க்கு புறப்பட்டு 9:15க்கு காரைக்குடியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.

News March 9, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $106(இந்திய மதிப்பில் ₹9,745) குறைந்து $5,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $81 ஆக உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று காலை நேர வர்த்தகத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹5,800 குறைந்தது கவனிக்கத்தக்கது. SHARE IT.

error: Content is protected !!