News May 20, 2024

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இப்போதே கணக்கு

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். இத்தேர்தலில் மகன் வெற்றி பெற்றால், கட்சியை மேலும் வலுப்படுத்தலாம், இல்லையெனில், அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 15- 20 தொகுதிகளை கேட்டு பெற்று கட்சியை வலுப்படுத்தலாம் என பிரேமலதா புது கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.

Similar News

News November 20, 2025

கனமழை: நாளை இங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதலே மழை பெய்யக்கூடும் என்பதால், நாளை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.

News November 19, 2025

12 பேரை திருமணம் செய்த பெண் (PHOTO)

image

போலீஸ் அதிகாரி உள்பட 12 பேரை திருமணம் செய்து ₹8 கோடி சுருட்டிய பெண் போலீசில் சிக்கியுள்ளார். உ.பி., கான்பூரை சேர்ந்த திவ்யான்ஷி செளத்ரி(30) ஆசிரியை என்ற போர்வையில் உலா வந்துள்ளார். Bank மேனேஜர்கள் 3 பேரை திருமணம் செய்துவிட்டு சிக்கியபோது, சில போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார். முன்பின் தெரியாத இதுபோன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருப்பது நல்லது என போலீசார் எச்சரிக்கின்றனர். உஷார்..!

News November 19, 2025

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு: கீர்த்தி

image

துபாய், USA நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு முன்புவரை ட்ரோல்களை தான் பார்த்ததே இல்லை என்ற அவர், இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் என் வேலையை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். கீர்த்தியின் பேச்சுக்கு உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!