News March 16, 2024

கடலூர் அருகே விபத்து.. டிரைவர் பலி 

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கோழி ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி இன்று(மார்ச்.16) மினிலாரி ஒன்று வந்தது. வேப்பூர்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையோரம் நின்ற லாரி மீது, மினி லாரி மோதியதில் காங்கேயத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஞானப்பிரகாசம்(25), என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

கடலூர்: லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

புவனகிரி அடுத்த சேர்ந்திரக்கிள்ளையை சேர்ந்தவர் கோகுலசந்துரு. இவர் நேற்று தனது பைக்கில் விருத்தாசலம்-சேலம் சாலை வழியாக வேப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.வேப்பூர் அடுத்த என். நாரையூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த டேங்கர்லாரி பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கோகுலசந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 22, 2025

கடலூர்: நவராத்திரியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்

image

கடலூர் மாவட்டம், நல்லாத்தூரில் திரிபுரசுந்தரி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்தில் அம்பாளை வணங்கி தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் நோய்கள் குணமாவதோடு, மீண்டும் நம்மை அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் நவராத்திரி தினத்தன்று இக்கோவிலில் சென்று வழிப்படுவது கூடுதல் சிறப்பாகும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

கடலூர்: கொலை செய்த 2 பேர் அதிரடி கைது

image

பண்ருட்டி அடுத்த கட்டியம்பாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திகேயன் (35) என்பவர் கடந்த 18.9.2025 அன்று சொக்கநாதர் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கார்த்திகேயனை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த தென்குமார் (30), மணிகண்டன் (32) ஆகியோரை நேற்று (செப்.,21) கைது செய்தனர்.

error: Content is protected !!