News July 3, 2024

உ.பி அரசின் அலட்சியமே விபத்துக்கு காரணம்: அகிலேஷ்

image

ஹத்ராஸ் உயிரிழப்புக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மாநில அரசு இந்த விவகாரத்தை முறையாக அணுகவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், அப்பாவி மக்கள் தங்களின் உயிரை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News November 19, 2025

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

தருமபுரி: பெரும்பாலை அருகே உள்ள சானாரப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கப்பன்(45). தொழிலாளியான இவர், நேற்று தெண்ணை மரத்தில் ஏறியபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், அவரது குடும்பத்தார் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தும் சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 19, 2025

மீண்டும் தலைமை பொறுப்பில் ஜெஃப் பெசோஸ்

image

Project Prometheus என்ற புதிய AI நிறுவனத்தின் இணை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் பொறுப்பேற்றுள்ளார். 6.2 பில்லியன் டாலர் நிதியில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், ரோபாட்டிக்ஸ் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தனது Blue origin நிறுவனத்தின் விண்வெளி ஆய்வுகளுக்கு உதவும் என்று ஜெஃப் பெசோஸ் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

News November 19, 2025

மதுரையில் மெட்ரோ திட்டம் நிறுத்தம் – மெட்ரோ விளக்கம்.!

image

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது, “மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு இல்லை. திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ சார்பில் பதில் அளிக்கப்படும். மேலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மக்கள்தொகை அடிப்படையில் நிறுத்த வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!