News March 18, 2024

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விபத்து

image

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (18.03.2024) திண்டுக்கல் – தாராபுரம் செல்லும் தனியார் பேருந்து வெளிய சென்ற போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமானது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தில் காயமின்றி இருசக்கர வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார்.

Similar News

News December 4, 2025

நிலக்கோட்டையில் பீர் பாட்டிலால் குத்தி கொலை: அதிரடி கைது!

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் லாரன்ஸ்(49) இவரது உறவினரான செபஸ்டின் ஜெயராஜ்(29) என்பவரும் கோவில்மேடு சிவன் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் செபஸ்டின் ஜெயராஜ் பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்தார். தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் செபாஸ்டின் ஜெயராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 4, 2025

திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய கொள்ளையன்!

image

திண்டுக்கல் இந்திரா நகரில் வசிக்கும் மாரிமுத்து, சொப்னா தேவி வீட்டில் பூட்டு சாவியை எடுத்து பணம், நகை கொள்ளை அடித்ததாக திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்.பி. பிரதீப் அவர்களின் உத்தரவின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் சிசிடிவி காட்சி தனிப்படை காவலர்கள் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கரூர் சதீஸ் குமார் என்பரை கைது செய்தனர்.

News December 4, 2025

நத்தம் அருகே சோகம்..கூலித்தொழிலாளி பலி!

image

நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று டூவீலரில் வத்திபட்டிக்கு சென்றுவிட்டு மதுரைதுவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில், விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் வந்தபோது, அவரது டூவீலரும் எதிரே வந்த காரும் மோதியது. இதில்,படுகாயம் அடைந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!