News May 21, 2024
ஸ்டாலின் ஆட்சியில் கல்வித்துறை சாதனை

கல்வித்துறையில் தமிழ்நாடு தலை சிறந்து விளங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வரின் ஆட்சியில் ₹600 கோடியில் காலை உணவுத் திட்டம், ₹436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ₹590 கோடியில் இல்லம் தேடி கல்வித் திட்டம், ₹101 கோடியில் ஆசிரியர்களுக்கு டேப்லெட், ₹1,887 கோடியில் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
‘சேயோன்’.. சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கல்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்திற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2022-ல் ‘மாயோன்’ படத்தை தயாரித்திருந்த டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம், அதன் 2-ம் பாகமாக சேயோன் என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தாக தெரிவித்துள்ளது. எனவே, ‘சேயோன்’ என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
News February 20, 2026
ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ.90.99 ஆக இன்று நிலைபெற்றது. டாலரின் வலுவான நிலை, தீவிரமடைந்து வரும் அமெரிக்க – ஈரான் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணம். ரூபாய் மதிப்பு சரிவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், எண்ணெய், தங்கம் போன்ற பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
News February 20, 2026
பட்டா தொலைந்துவிட்டதா? இதை செய்யுங்க!

குறிப்பிட்ட நிலம், வீடு, வீட்டுமனை ஒருவருக்கு சொந்தம் என்பதற்கான அரசு ஆவணம் பட்டா. அது தொலைந்து விட்டால், முதலில் தாசில்தாரிடம் புகார் வழங்க வேண்டும். பின்னர், நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில், பட்டா எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். அதனை, அவர் VAO மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்புவார். விசாரணைக்கு பிறகு, மனு மீது ஒப்புதல் பெறப்பட்டு நகல் பட்டா அளிக்கப்படும்.


