News April 5, 2025

ஏசி விலை விரைவில் உயருகிறது

image

ஏசி விலை 4%-5% வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. USA அதிபர் டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எதிரொலியால், இந்தியாவில் ஏசி தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் காப்பர், ஸ்டீல், அலுமினியம், கேஸ் ஆகியவற்றின் விலை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் செலவினம் அதிகரித்திருப்பதால், அதை ஈடுகட்ட இந்த வாரம் ஏசி விலையை உயர்த்த இருப்பதாக ப்ளு ஸ்டார், ஹையர் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Similar News

News April 11, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 11 ▶பங்குனி – 28 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 19:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶நட்சத்திரம்: உத்திரம் 25.12

News April 11, 2025

கடன்களுக்கான வட்டியை மேலும் ஒரு வங்கி குறைப்பு

image

கடன்களுக்கான வட்டியை பேங்க் ஆப் பரோடா வங்கியும் தற்போது குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி நேற்று 25 புள்ளிகள் குறைத்தது. இதையடுத்து, PNB, BOI, UCO, IB ஆகிய வங்கிகள், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை 35 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தன. இந்நிலையில், பேங்க் ஆப் பரோடா வங்கியும் தற்போது சில்லரை வணிகம், சிறு குறு தாெழில் கடன் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

News April 11, 2025

அமித்ஷா சென்னை வருகை..

image

இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவரை இறுதி செய்வது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவையை அமித் ஷா மேற்கொள்ள உள்ளார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் அவரை சந்திக்க உள்ளதால் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வரலாம்.

error: Content is protected !!