News March 10, 2025
ஏசி விலை ₹2,000 உயர்வு

வெயில் இப்போதே வெளுத்து வாங்குவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், ஏசியை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஏசி விலையை யூனிட் ஒன்றுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படுவதாக ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. புளூஸ்டார் நிறுவனம் 3% அளவுக்கு விலையை உயர்த்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஹயர் நிறுவனமும் தனது ஏசியின் விலை 4 – 5% வரை உயர்த்த உள்ளது.
Similar News
News July 9, 2025
ஜூலை 9… வரலாற்றில் இன்று!

*1866 – பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதலமைச்சரானார். *1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின. *1930 – திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த தினம் * 2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர். *2011 – சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.
News July 9, 2025
’அதிகாரிகள் மீது நடவடிக்கை’: அமைச்சர் சேகர் பாபு உறுதி

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் புனித நீர் ஊற்ற செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமைச்சர் சேகர்பாபு தனது இல்லத்துக்கு வந்து தன்னை சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News July 9, 2025
’16 முறை சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்கிறோம்’

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுபான்ஷுவுடன் மேகாலயா, அசாமை சேர்ந்த மாணவர்கள் கலந்துரையாடினர். அப்போது, விண்வெளியில் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்ப்பதாக சுபான்ஷு தெரிவித்தார். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், உடலில் தசைகளும், எலும்பும் பலவீனமாகிவிடும் என்பதால் தினமும் ட்ரெட்மில், சைக்கிளிங் மெஷனில் உடற்பயிற்சி செய்வதாகவும் கூறினார்.