News April 19, 2025

AC புறநகர் ரயில் சேவை தொடங்கியது

image

சென்னையில் முதல்முறையாக AC வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை முதல் AC ரயில் இன்று புறப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45 மணி, இரவு 7.35 மணிக்கு இந்த AC ரயில் சேவை இருக்கும். இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட AC ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 7, 2025

JUST IN: சென்னையில் IT ஊழியர் விபரீத முடிவு

image

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 7, 2025

மெரினாவில் இதற்கு தடை

image

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசாபுரம் வரை உள்ள பகுதியில், கடைகள் அமைக்கவும் வியாபாரம் செய்யவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி அங்கு கடைகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

சென்னை மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

image

சென்னை மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17329677>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!