News April 19, 2025
AC ரயிலின் கட்டண விவரம்

சென்னையில் இன்று தொடங்கிய AC வசதியுடன் கூடிய புறநகர் ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.105 டிக்கெட் கட்டணம் ஆகும். சென்னை கடற்கரையில் இருந்து தம்பரத்திற்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். தாம்பரம் – எழும்பூருக்கு ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூருக்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News July 11, 2025
நீதிமன்றத்தில் நேரில் மன்னிப்பு கோரிய மாநகராட்சி ஆணையர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜரான சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
News July 11, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (ஜூலை 10) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.
News July 10, 2025
சென்னையில் திகிலூட்டும் 6 இடங்கள்

▶️ டீமான்டி காலனி – ஆழ்வார்பேட்டை
▶️ உடைந்த பாலம் – பெசன்ட் நகர்
▶️ நிழல் வழிச்சாலை – பெசன்ட் நகர்
▶️ வால்மீகி நகர் – திருமான்மியூர்
▶️ விக்டோரியா விடுதி சாலை – சேப்பாக்கம்
▶️ ப்ளூ கிராஸ் ரோடு – பெசன்ட் நகர்
உங்களுக்கு திகில் நிறைந்த அனுபவம் பிடிக்கும் என்றால், இங்கெல்லாம் நீங்கள் அழைத்து செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்து திகில் அனுபவத்தை பெறுங்கள்.