News November 20, 2024

ABP: ஜார்கண்டில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்

image

மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பை ஏபிபி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக தலைமையிலான கூட்டணி 45% வாக்குகளுக்கு மேல் பெற்று 42 முதல் 47 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 38 சதவீத வாக்குகளை பெற்று 25 முதல் 30 தொகுதிகளை வெல்லக்கூடும். மற்ற கட்சிகள் 17% வாக்குகள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

CBSE 10-ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம்

image

வரும் கல்வியாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் CBSE மாற்றம் செய்ய உள்ளது. அதன்படி, அறிவியல் வினாத்தாள் A (உயிரியல்), B (வேதியியல்), C (இயற்பியல்) மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள் A (வரலாறு), B (புவியியல்), C (அரசியல் அறிவியல்), D (பொருளாதாரம்) என பிரிக்கப்படும். இந்த கட்டமைப்பில் விடைகளை எழுத தவறினால் மதிப்பீடு செய்யப்படாது.

News December 11, 2025

‘வா வாத்தியார்’ படத்துக்கு தடை நீட்டிப்பு

image

நாளை வெளியாக இருந்த ‘வா வாத்தியார்’ படத்திற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற ₹21.78 கோடியை திருப்பி தராததால், படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால், இப்படத்தை வெளியிட சமீபத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கடன் தொகையை செலுத்தும் வரை படத்தை ரிலீஸ் செய்ய நீதிபதிகள் தடைவிதித்துள்ளனர்.

News December 11, 2025

சபரிமலை நடை திறப்பு நேரம் அதிகரிப்பு

image

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மதியம் மற்றும் இரவில், கோவில் நடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 1:00 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை 1:30 மணி வரையிலும், இரவில் ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக 11:15 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 45 நிமிடங்களில் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும்.

error: Content is protected !!