News March 31, 2025
சிறுமிக்கு கருக்கலைப்பு – சிக்கிய காதலனின் குடும்பம்

பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ? சென்னையில் 15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததால் காதலன், அவரது பெற்றோர், டாக்டர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலனின் அவசரத்தால் கர்ப்பமான சிறுமிக்கு, தனியார் ஹாஸ்பிடலில் காதலனின் குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News April 2, 2025
ஹாட்ரிக் வெற்றி பெறுமா RCB? GTயுடன் இன்று மோதல்!

Points tableல் முதல் இடத்தில் இருக்கும் RCB அணி, 4வது இடத்தில் இருக்கும் GTயை எதிர்கொள்கிறது. பெங்களூரு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், ரன்மழை பொழியும் என நம்பலாம். கடந்த சீசனில் RCBக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் GT தோல்வியடைந்த நிலையில், அதற்கு பழிதீர்க்குமா என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும். யார் வெற்றி பெறுவாங்க என நினைக்கிறீங்க?
News April 2, 2025
இனி மாதம் ஒருமுறை மின்கட்டணம்

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வரவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகளுக்கு தற்போது 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால், EB BILL அதிகமாக கட்டவேண்டிய சூழல் எழுகிறது. இந்நிலையில், 2021 திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாதந்தோறும் மின் நுகர்வை கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.
News April 2, 2025
வெற்றி சின்னத்தை காட்டும் ஸ்ரேயாஸ்

பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அணியை அதிகமுறை வெற்றி பெறச் செய்த கேப்டன்களின் வரிசையில் அவர் 3ஆம் இடம் பிடித்துள்ளார். இதுவரை 72 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அவர், 55.5% வெற்றிகளைப் பெற்றுத்தந்து, ரோஹித்தை (55.06%) முந்தியுள்ளார். இந்த பட்டியலில் தோனி (58.84%) முதலிடத்திலும், சச்சின் (58.82%) 2ஆம் இடத்திலும் உள்ளனர்.