News August 20, 2024
லேடரல் என்ட்ரி நடைமுறை ரத்து: மத்திய அரசு

லேடரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமன நடைமுறையை ரத்து செய்யுமாறு, UPSCக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. UPSC தேர்வு பெறாதவர்களும், தனியார் துறையை சேர்ந்தவர்களும் மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் நேரடி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதனால், SC,ST பிரிவினரின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், சமூக நீதியை காக்கும் நடவடிக்கையாக இந்த நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
Similar News
News March 27, 2026
விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மஹாவீர் ஜெயந்தி விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC இணையதளம் (அ) மொபைல் ஆப்பில் டிக்கெட் புக் செய்து உங்கள் பயணத்தை எளிதாக்குங்கள்.
News March 27, 2026
லிவ்-இன் ரிலேஷன் குற்றமல்ல.. கோர்ட் அதிரடி

லிவ்-இன் ரிலேஷனில் உள்ள இருவர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் HC-ல் வழக்கு தொடர்ந்தனர். இதன் மீதான விசாரணையில், திருமணமான ஒரு ஆண் வேறொரு வயதுவந்த பெண்ணுடன் லிவ்-இன் ரிலேஷனில் இருப்பது குற்றமல்ல என்று HC தெரிவித்துள்ளது. சமூக கண்ணோட்டத்தில் திருமணமானவர் வேறு பெண்ணுடன் உறவில் இருப்பது குற்றமாக கருதப்பட்டாலும், சட்டம் என்பது வேறு; அறநெறிகள் என்பது வேறு என்றும் HC தெளிவுபடுத்தியுள்ளது.
News March 27, 2026
அதிமுக-பாஜக MLA இடையே டீலிங்.. சுவாரஸ்யம்

2026 தேர்தலுக்காக பாஜக MLA வானதியும் அதிமுக MLA அம்மன் அர்ஜுனனும் சிட்டிங் தொகுதியை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துள்ளனர். 2016-ல் கோவை தெற்கில் வென்ற அர்ஜுனன், 2021-ல் வானதி சீனிவாசனுக்கு அதை விட்டுக்கொடுத்து விட்டு, அவர் வடக்கில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை கோவை தெற்கிலேயே அர்ஜுனன் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், வானதி வடக்கில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


