News September 14, 2024
பாஸ்மதி அரிசி மீதான ஏற்றுமதி வரி நீக்கம்

பாஸ்மதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், மோடி அரசு எடுத்த இந்த முடிவால் விவசாயிகள் விளைவிக்கும் பாஸ்மதி அரிசிக்கு உரிய விலை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான அடிப்படை வரியை 32.5%ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 23, 2025
டிசம்பர் 23: வரலாற்றில் இன்று

*தேசிய உழவர் நாள்.
*1902 – இந்தியாவின் 5-வது PM சரண் சிங் பிறந்தநாள்.
*1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அமெரிக்காவின் பாஸ்டனில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
*1981 – பி.கக்கன் நினைவுநாள்.
*2004 – இந்தியாவின் 9-வது PM பி.வி.நரசிம்ம ராவ் நினைவுநாள்.
*2014 – கே.பாலச்சந்தர் நினைவுநாள்.
News December 23, 2025
நான் ரஜினியின் பக்தன்: உபேந்திரா

‘கூலி’ படத்தில் சிறிய ரோலில் நடித்ததாக எழுந்த விமர்சனங்கள் பற்றி விளக்கமளித்துள்ள உபேந்திரா, ரஜினியுடன் ஒரு ஷாட்டாக (Shot) இருந்தாலும் நான் நிச்சயமாக நடிப்பேன் என நெகிழ்ந்து கூறியுள்ளார். கூலி படத்தில் ரஜினிக்காகவே நடித்தேன் என்ற அவர், தான் அவரது தீவிர பக்தன் (ரசிகன்) என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, இதுபோன்ற விமர்சனத்திற்கு, ரஜினிக்காகவே நடித்தேன் என ஆமிர் கானும் கூறியிருந்தார்.
News December 23, 2025
திமுக வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியுள்ளது: EPS

100 நாள் வேலை திட்டத்தை 125 நாள்களாக உயர்த்தியதை பாராட்ட திமுக அரசுக்கு மனமில்லை என்று EPS தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துவோம் என கூறிய திமுகவின் வாக்குறுதியை மத்திய அரசு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், 100 நாள் வேலை திட்டத்தில் இருந்த காந்தி பெயரை மாற்றியதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் EPS வலியுறுத்தியுள்ளார்.


