News August 5, 2024
உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்க: அன்புமணி

திரையுலகைக் காக்க தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் உள்ளாட்சி கேளிக்கை (8%) வரியை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களால் திரைத் துறையே முடங்கும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறிய அவர், இருதரப்பும் பேசி இதற்கு தீர்வு காண முன்வர வேண்டுமெனக் கூறியுள்ளார்.
Similar News
News April 6, 2026
BREAKING: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நாளான இன்று மட்டும் 2,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
News April 6, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,440 உயர்வு!

காலையில் சவரனுக்கு ₹1,120 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த 22 கேரட் <<19578408>>தங்கம் விலை<<>>, பிற்பகலில் ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹180 அதிகரித்து ₹13,990-க்கும், 1 சவரன் ₹1,11,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரும் சரிவை சந்தித்த தங்கம் விலை, ஏப்ரல் தொடங்கியதில் இருந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.