News December 5, 2024
பண்ட், ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய அபிஷேக்

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்தில் சதமடித்து அசத்தினார். 144 ரன் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஓப்பனர் அபிஷேக் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன்மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் பண்ட், ரோஹித் ஆகியோர் 3, 4வது இடத்தில் உள்ளனர்.
Similar News
News November 23, 2025
Cinema Roundup: ரஜினி பிறந்தநாளுக்கு மாஸ் அப்டேட்

*பல ஆண்டுகளுக்கு பிறகு, தெலுங்கு படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல். *பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்குவதை விட, சொந்தமாக வெப்சீரிஸ், ஒரிஜினல்ஸை தயாரிக்க நெட்ஃபிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாம். *ரஜினி பிறந்தநாளில் ‘ஜெயிலர் 2’ கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். *விமல் நடித்துள்ள ‘மகாசேனா’ படம் வரும் டிசம்பர் 12-ல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு.
News November 23, 2025
3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

கடல் நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவு பற்றாக்குறை போன்ற காலகட்டங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வருடக்கணக்கில் இவை தூங்குகின்றனவாம். இதன் மூலம், அவை உணவில்லாமலும் நீண்ட நாள்கள் வாழ முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவை அறிவித்தார்

NDA கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்பதை விஜய் உறுதிப்படுத்தியுள்ளார். கரூர் துயருக்கு பிறகு அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தவெகவின் கொள்கை எதிரி (பாஜக) யார் என்பதை தெளிவாக சொல்லிய பிறகே களத்திற்கு வந்துள்ளதாகவும், அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இன்றைய பேச்சில் BJP-ஐ விஜய் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


