News April 13, 2025
அபிஷேக் சர்மா அதிரடி சதமடித்து அசத்தல்..!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதமடித்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். பஞ்சாப் பந்துவீச்சை பறக்கவிட்ட அவர், 11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசியுள்ளார். சதமடித்த அபிஷேக் சர்மா, ‘THIS ONE IS FOR ORANGE ARMY’ என்று எழுதப்பட்டிருந்த பேப்பரை ரசிகர்களுக்காக எடுத்துக் காட்டினார். அவரது அதிரடியாக ஹைதராபாத் அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
Similar News
News November 17, 2025
இனி டேட்டாவிற்கு பாதுகாப்பு! புதிய விதிகள் அமல்!

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் நமது டேட்டாக்கள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசு புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகளை கொண்டு வந்துள்ளது. டேட்டாக்கள் திருடப்பட்டால் 72 மணி நேரத்திற்குள் தெரிவித்தால் போதும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விதிகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வர 12-18 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
BREAKING: அமைச்சர் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி

கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள சிஎம்சி ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நலக் குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இன்று மாலை கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
ராசி பலன்கள் (17.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


