News May 26, 2024

சிக்ஸில் சாதித்த அபிஷேக் சர்மா முதலிடம்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 42 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து 38 சிக்சர்கள் அடித்த ஹைதராபாத் அணியின் கிளாசன் 2ஆவது இடத்திலும், விராட் கோரி (38) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
லக்னோ அணியின் பூரன் (36), ஆர்சிபியின் பட்டிதார் (33) சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

Similar News

News March 12, 2026

BREAKING: தமிழகத்தில் அடுத்த பிரச்னை வெடித்தது

image

தூத்துக்குடியில் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற <<19356260>>+2 மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவியை அடையாறு பகுதியில் காரில் கடத்தி ஒரு கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விவகாரம் TN-ல் அடுத்த பிரச்னையாக வெடித்துள்ளது.

News March 12, 2026

பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

image

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

News March 12, 2026

349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>upsc.gov.in<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹57,000 – ₹1.77 லட்சம் வரை கிடைக்கும். SHARE.

error: Content is protected !!