News December 5, 2024
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் பச்சன்

திருமணமான ஆண்கள் அனைவரும் அவரவர் மனைவியின் பேச்சை கேட்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். அபிஷேக் பச்சன் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்து பிரியப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் இவ்வாறு மறைமுகமாக கூறி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் கூறுகின்றனர்.
Similar News
News April 29, 2025
உங்கக்கிட்ட இந்த 7 பழக்கங்கள் இருக்கா?

வாழ்வில் நினைத்ததை எட்டிப்பிடித்து வெற்றிபெற சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் ➣எதிர்மறை சிந்தனையை கைவிடுங்கள் ➣முதலில் யாருடனும் உங்களை ஒப்பிட்டு கொள்ளும் பழக்கம் வேண்டாம் ➣சோம்பேறித்தனத்தால் வேலையை தள்ளிப்போடாதீர்கள் ➣பொறாமைப்பட்டு, எதுவும் செய்துவிட முடியாது ➣நான் இதை முடிப்பேன் என நம்பிக்கை மட்டும் போதும். Over-confidence வேண்டாமே ➣பிறர் விமர்சனத்தால் சட்டென துவண்டுவிட வேண்டாம்!
News April 29, 2025
IPL: 4 சதங்களுமே மேஜிக்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதை அடித்த 4 வீரர்களும் இந்தியர்கள்தான். அதிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் லெஃப்ட் ஹேண்ட் என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு. பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் 141 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக கிஷன் 106, சென்னைக்கு எதிராக பிரியான்ஷ் 103 மற்றும் குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி 101 ரன்களையும் அடித்துள்ளனர்.
News April 29, 2025
UPI சரியா வேலை செய்யணும்.. அமைச்சர் கண்டிப்பு

கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் 282 நிமிடங்கள் UPI வேலை செய்யாத நிலையில், இனி இதுபோன்ற இடையூறு இருக்கக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிப்பு காட்டியுள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், RBI, NPCI அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 100 கோடி UPI பரிவர்த்தனைகள் நடக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.