News May 13, 2024
ஆந்திராவில் வாக்குச்சாவடி முகவர்கள் கடத்தல்?

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு புங்கனூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் ஆதரவாளர்களே கடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News February 19, 2026
மகளிர் வங்கிக் கணக்கில் ₹4000 .. ஹேப்பி நியூஸ்

கோடைகால சிறப்பு நிதியாக இனி ஆண்டுதோறும் மகளிருக்கு <<19184435>>₹2,000<<>> வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 மாத மகளிர் உரிமை தொகையுடன், கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து, மகளிரின் வங்கி கணக்கில் ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மே மாதத்தில் மட்டும் தேர்தல் வாக்குறுதியின்படி உயர்த்தப்படவுள்ள மகளிர் உரிமை தொகை ₹2,000, கோடைகால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹4,000 வழங்கப்படும்.
News February 19, 2026
காங்கிரஸை சாடிய வைகோ

மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தான் தலைமை ஏற்க வேண்டுமென பிற மாநிலங்களில் இருந்து குரல்கள் வருவது திமுகவுக்கு பெருமை; இதனால் கூட்டணி கட்சிகளும் பெருமையடைகிறோம் என பேசியுள்ளார். மேலும், காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் 9 குரல் கொடுப்பார்கள், அவற்றுக்கெல்லாம் பதில் கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
பங்குச்சந்தையில் ₹7 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச்சந்தை 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு இன்று கடுமையாக சரிந்துள்ளது. லாப விற்பனை, அமெரிக்கா-ஈரான் பதற்றம், எண்ணெய் விலை உயர்வு ஆகியவை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் சரிந்து 82,498 ஆகவும், நிஃப்டி 365 புள்ளிகள் சரிந்து 25,450 ஆகவும் உள்ளன. இன்ஃபி, டிசிஎஸ் தவிர மற்ற அனைத்து பங்குகளும் சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு ₹7 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.


