News June 7, 2024
மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடுக: ராமதாஸ்

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டண உயர்வை மக்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும் என வினவியுள்ளார்.
Similar News
News September 23, 2025
8 ஆண்டுகள் முன்பே வரியை குறைத்திருக்கலாமே? CM

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள GST வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கில் இருந்து செய்யப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை சேமித்து இருக்குமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தி திணிப்பை ஏற்க மறுப்பதற்காக தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News September 23, 2025
பிரபல நடிகை கர்ப்பம்.. PHOTO

நடிகை கத்ரீனா கைஃப் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை, இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளார். நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கப் போவதாக அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் விக்கி கௌசலுக்கும் (37), நடிகை கத்ரீனா கைஃப்பிற்கும் (42) கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
News September 23, 2025
கனிமொழிக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்

அமித்ஷா வீட்டில்தான் அதிமுக அலுவலகம் அமைத்துள்ளது என கனிமொழி கூறியதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக அலுவலகம் சென்னையில் தான் அமைந்துள்ளது எனவும், வந்து பாருங்கள் எனவும் கனிமொழிக்கு அவர் அழைப்புவிடுத்தார். மேலும், அதிமுக அலுவலகத்தை திமுக ஆள் வைத்து தகர்க்க பார்த்ததாக குற்றம்சாட்டிய அவர், ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என கூறினார்.