News March 25, 2025
ஆவின் நெய்: அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்!

ஆவின் நெய் உலகத் தரம் வாய்ந்தது. அதனை அமெரிக்கர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மற்ற நெய்களை விட, ₹50 அதிகமாக இருந்தாலும், அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் ஆவின் மூலம் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Similar News
News November 14, 2025
19-ம் தேதி தமிழகம் வரும் PM மோடி

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், வரும் 19-ம் தேதி கோவையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள PM மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களை PM மோடி சந்தித்து பேச உள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், PM மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
News November 14, 2025
International Roundup: டிரம்ப்புக்கு இழப்பீடு வழங்க BBC மறுப்பு

*டிரம்ப்பின் பேச்சை திரித்து பரப்பியதற்காக BBC மன்னிப்பு கோரியது, ஆனால் இழப்பீடு வழங்க மறுத்துள்ளது. *செவ்வாய் கோளை ஆராய நாசாவும், அமேசானின் புளு ஒரிஜினும் இணைந்து விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. *இஸ்ரேல் தாக்குதலில் 2 குழந்தைகள் பலி. *15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Verizon நிறுவனம் முடிவு. *சூடானின் கிழக்கு பகுதியில் முற்றுகையிட தொடங்கியது அந்நாட்டின் துணை ராணுவப்படை.
News November 14, 2025
நவம்பர் 14: வரலாற்றில் இன்று

*உலக நீரிழிவு நாள். * தேசிய குழந்தைகள் தினம். *1889 – ஜவகர்லால் நேரு பிறந்தநாள். *1965 – அமெரிக்கா – வியட்நாம் இடையே போர் தொடங்கியது. 1971 – மரைனர் 9 விண்கலம் செவ்வாய் கோளை சென்றடைந்தது. 1957 – நடிகர் ஆர்.பார்த்திபன் பிறந்தநாள். 1984 – நடிகை மம்தா மோகன்தாஸ் பிறந்தநாள். *1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.


