News June 25, 2024

ஜெயம் ரவியுடன் எடுத்த படங்களை நீக்கிய ஆர்த்தி

image

நடிகர் ஜெயம் ரவியுடன் உள்ள அனைத்து புகைப்படங்களையும் அவரது மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கியுள்ளார். இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆர்த்தியின் செயல் அமைந்துள்ளதாகக் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், விவாகரத்து தொடர்பாக இதுவரை இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் கூறவில்லை.

Similar News

News November 10, 2025

Magic அரிசி: சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்!

image

அரிசியை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஊறவைத்த பின் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் அரிசி தெரியுமா? அசாமின் கோமல் சால் எனப்படும் மந்திர அரிசி தான் அது. இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறிவிடும். இதன் பயன்பாடு காலப்போக்கில் குறைந்த நிலையில், சமைக்க நேரமில்லாமல் ஓடும் மக்களால், மீண்டும் இதற்கு மவுசு கூடியுள்ளது. ஆன்லைனில் கூட விற்பனை தொடங்கியுள்ளது.

News November 10, 2025

பள்ளி மாணவர்களுக்கான HAPPY NEWS

image

புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவ.23, 24 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 2 குழுக்களில் உள்ள 32 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

News November 10, 2025

SIR என்றாலும், சார் என்றாலும் திமுக அலறல்: EPS

image

SIR என்றால் திமுகவினர் அலறுகின்றனர்; பதறுகின்றனர் என்று EPS விமர்சித்துள்ளார். SIR மூலம் போலி வாக்காளர்களை நீக்குவது தவறா எனக் கேள்வி எழுப்பிய அவர், SIR என்றாலும், சார் என்றாலும் திமுக நடுங்குகிறது என்று விமர்சித்தார். மேலும், SIR-ஐ அமல்படுத்த தமிழ்நாட்டில் போதுமான கால அவகாசம் உள்ளதாக கூறிய அவர், திருட்டுத்தனமாக ஓட்டு போட வசதியாக இருக்கும் என்பதால் SIR-ஐ பார்த்து திமுக பயப்படுவதாகவும் சாடினார்.

error: Content is protected !!