News April 1, 2025
தவெகவில் இணைந்த AAP மாநில நிர்வாகி தேவகுமார்

ஆம் ஆத்மியின் மாநில ஐடி விங் மாநிலச் செயலாளர் டாக்டர் தேவகுமார் தவெகவில் இணைந்தார். கடலூர் மண்டலத் தலைவராகவும் இருந்த தேவகுமார், விஜய்யின் தீவிர ரசிகராவார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அவர், நெய்வேலியில் உள்ள தனது ஹாஸ்பிடலில் தவெகவினருக்கு மருத்துவ செலவில் 25% கட்டணச் சலுகையை அறிவித்துள்ளதோடு, கடலூரில் கட்சி சார்பில் மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 2, 2025
மீண்டும் ரயில் தடம் புரண்டது

ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம்புரண்டது. அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் ஒடிஷாவில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
பணியின் இறுதிநாளில் உயிரை விட்ட சோகம்…!

ஜார்கண்ட் ரயில் விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்டுக்கு அன்றுதான் கடைசி பணி நாள் என்ற சோக செய்தி வெளியாகியுள்ளது. சரக்கு ரயில்கள் நேற்று மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்கேஸ்வர் மாலும் ஒருவர். மகிழ்ச்சியுடன் ஓய்வு நாட்களை கழித்திருக்க வேண்டிய அவர், இப்போது உயிருடன் இல்லை. பணியின் கடைசி நாள், அவரது வாழ்வின் கடைசி நாளாக மாறியுள்ளது.
News April 2, 2025
தட்கல் டிக்கெட் கேன்சல்.. பணம் திருப்பி தரப்படுமா?

ரயிலில் அவசர பயணத்திற்காக தட்கல் டிக்கெட் வசதி அமலில் உள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டை ஏதேனும் காரணத்திற்காக பயணிகள் கேன்சல் செய்தால், டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படுமா, தரப்படாதா என சந்தேகம் இருக்கும். தட்கல் டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தால், அதற்கான பணம் திருப்பித் தரப்படாது. ஆனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எனில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டபிறகு பணம் திருப்பித் தரப்படும்.