News March 25, 2024
பதவியை ராஜினாமா செய்தார் அமமுக வேட்பாளர்

திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதால், அவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன், மேயர் அன்பழகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
Similar News
News January 18, 2026
திமுக கூட்டணியில் விசிகவால் ஏற்பட்ட திருப்பம்

அன்புமணி அதிமுக பக்கம் சென்றுவிட்டதால், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவார் எனப் பேசப்படுகிறது. இதனால் விசிகவை சமரசம் செய்யும் வேலையில் திமுகவினர் இறங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சாதிய பாமக கட்சியுடன் எப்போதும் உறவு கிடையாது என விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார். இது, ராமதாஸ் மூலம் வடமாவட்டங்களில் பலம்பெற நினைத்த திமுகவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 18, 2026
இந்திய பந்துவீச்சை நொறுக்கும் மிட்செல்!

இந்தியாவுக்கு எதிராக ODI-ல் தனது 4-வது சதத்தை டேரில் மிட்செல் பதிவு செய்து அசத்தியுள்ளார். 3-வது ODI-ல் 60 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து NZ தடுமாறினாலும், மிட்செல்-பிலிஃப்ஸ் இணைந்து 140+ ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி வருகின்றனர். இதில், மிட்செல் 10 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி சதம் அடித்துள்ளார். NZ-ன் ரன்ரேட்டை கட்டுப்படுத்த, மிட்செலை IND உடனடியாக அவுட் செய்வது அவசியம்.
News January 18, 2026
1500 குழந்தைகளை மீட்ட பெண் இன்ஸ்பெக்டர்!

கடந்த 3 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்ட RPF இன்ஸ்பெக்டர் சந்தனா சின்ஹாவுக்கு Ati Vishisht Rail Seva Puraskar என்ற இந்திய ரயில்வேயின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. லக்னோவின் சார்பாக் ரயில் நிலைய இன்ஸ்பெக்டரான அவர், 2024-ல் 494 & 2025-ல் 1,032 குழந்தைகளை மீட்டுள்ளார். தனியாக நிற்பவர்கள் & கடத்தல் கும்பலிடம் சிக்கிய குழந்தைகளை நுட்பமாக கவனித்து, அதிரடியாக மீட்பதே அவரது ஸ்டைல்.


