News July 7, 2025
விஷ்ணு விஷால் குழந்தைக்கு பெயர் வைத்த அமீர்கான்

நடிகர் விஷ்ணு விஷால் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் பெயர் வைத்துள்ளார். விஷ்ணு விஷால் முன்னாள் பேட்மிட்டன் வீராங்கணை ஜுவாலா கட்டா தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெண்குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமீர்கான் குழந்தைக்கு மிரா என பெயர் வைத்துள்ளார். மிரா என்றால் நிபந்தனை அற்ற அன்பு மற்றும் அமைதி என பொருள்.
Similar News
News July 7, 2025
இபிஎஸ்-ஐ புறக்கணித்த அண்ணாமலை!

இபிஎஸ்-ன் தேர்தல் பரப்புரை தொடக்க விழாவை அண்ணாமலை புறக்கணித்துள்ளார். கோவையில் இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது பரப்புரையை தொடங்குகிறார். இதில், பாஜக நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். எல்.முருகனுடன் தானும் பங்கேற்கவிருப்பதாக நேற்று நயினார் கூறியுள்ளார். நேற்று திருப்பூரில் திருமண விழாவில் பங்கேற்ற அண்ணாமலை, அருகில் நடக்கும் இபிஎஸ்-ன் நிகழ்வை புறக்கணித்ததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News July 7, 2025
Pressure-ஐ Poem-ஆக மாற்றியவர்… MSD-க்கு CM ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் Ex. கேப்டன் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, CM ஸ்டாலின் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், Pressure-ஐ Poem-ஆக மாற்றிய தோனிக்கு ஹேப்பி பர்த்டே என குறிப்பிட்டுள்ளார். மேலும், மகத்துவம் பிறப்பில் வருவதல்ல… ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு ரன்னிலும், ஒவ்வொரு வெற்றியிலும் கட்டமைக்கப்படுவது என்பதை நிரூபித்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News July 7, 2025
LGBTQ +.. முடிவை மாற்றிய திருமாவளவன்

2 ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது என கோவையில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் திருமாவளவன் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்ப, வருந்துவதாக கூறியுள்ளார். மேலும், ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பு விசிகவுக்கே உண்டு என அவர் பெருமைப்பட்டுள்ளார். LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக விசிக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.