News February 9, 2025
முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739047387622_785-normal-WIFI.webp)
டெல்லி சட்டப்பேரவையில் முஸ்லிம் MLAக்கள் அதிகம் கொண்ட கட்சியாக AAP இருந்தது. இந்தநிலை மீண்டும் தொடர்கிறது. டெல்லியில் முஸ்லிம்கள் 13% இருந்தபோதிலும் 7 தொகுதியில் மட்டுமே வெற்றி, தோல்வியை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதில் முஸ்தபாபாத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற, மீதமுள்ள 6 தொகுதிகளில் AAP வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், காங்., 7 தொகுதிகளில் முஸ்லிம்களை நிறுத்தியும் பலன் கிடைக்கவில்லை.
Similar News
News February 9, 2025
பாஜக, AAP இடையே வாக்கு வித்தியாசம் இவ்வளவு தானா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739059012313_785-normal-WIFI.webp)
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 2%க்கும் குறைவாகவே உள்ளது. பாஜக 45.56%, ஆம் ஆத்மி 43.57% வாக்குகளும் பெற்றுள்ளன. ஆனால், தொகுதி வாரியாக 26 இடங்கள் வித்தியாசம் உள்ளது. பாஜக 48 தொகுதிகளையும், AAP 22 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் 3 வேட்பாளர்களும் AAPஐ சேர்ந்தவர்கள் ஆவர்.
News February 9, 2025
கூட்டுறவு வங்கிகளில் ₹1 லட்சம் கோடி கடன் இலக்கு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739057167694_785-normal-WIFI.webp)
கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் ₹1 லட்சம் கோடி கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நகைக்கடன், பயிர்க்கடன் என ₹85,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், இலக்கை அடைவது கடினமாகியுள்ளது. தொடர்ந்து, மகளிர் குழு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 9, 2025
+2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1735822134971_55-normal-WIFI.webp)
+1, +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.