News August 5, 2024
மகாராஷ்டிரா தேர்தலில் ஆம் ஆத்மி

இந்தாண்டு மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை மையமாக கொண்ட அக்கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் நோக்கில் மகாராஷ்டிராவில் களம் இறங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள 36 தொகுதிகளிலும், மேலும் சில தொகுதிகளிலும் அக்கட்சி களம் இறங்கவுள்ளது.
Similar News
News March 6, 2026
ஈரானின் உயர் தலைவரை தேர்வு செய்வேன்: டிரம்ப்

ஈரானின் புதிய உயர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா பதவியேற்பதை தான் விரும்பவில்லை என தெரிவித்த அவர், அமைதியை நிலைநாட்டக் கூடிய ஒருவர் பதவிக்கு வரவேண்டும் என்றார். ஈரானியர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதாகவும், வெனிசூலாவை போல ஈரானின் உயர் தலைவர் தேர்வில் தனது தலையீடு இருக்கும் எனவும் அவர் கூறினார்.
News March 6, 2026
மாணவர்களை தவிக்க விட்ட திமுக அரசு: அன்புமணி

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சாதி & வருவாய்ச் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அதுபோல, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கான அடங்கல் ஆவணமும் உழவர்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே, வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை திமுக அரசு முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் X பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
News March 6, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.


