News August 20, 2024

ஆம் ஆத்மி – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி?

image

கெஜ்ரிவால் மனைவி சுனிதா, தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சரத் பவாரை சந்தித்துப்பேசியுள்ளார். ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், புனேயில் சுமார் 45 நிமிடங்கள் இச்சந்திப்பு நீடித்தது. இதில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கெஜ்ரிவால் விடுதலைக்கு ஆதரவு கோரி, இச்சந்திப்பு நடந்ததாக AAP தரப்பினர் கூறுகின்றனர்.

Similar News

News March 17, 2026

ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்!

image

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு என்பதை சொன்ன பிறகு தங்களை அழையுங்கள் என திமுக தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளனவாம். இதனால், திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸுக்கு கூடுதல் சீட்டு ஒதுக்கியதால் தங்களுக்கும் கூடுதல் சீட்டுகள் வேண்டும் என CPI, CPM, VCK, ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடிக்கிறது.

News March 17, 2026

FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

image

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

News March 17, 2026

தவெகவுடன் கூட்டணியா? நயினார் மழுப்பல்

image

அதிமுக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், EPS-ம் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் NDA உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இப்போதும் தவெக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுபற்றி விஜய் கூறினால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!