News June 6, 2024
டெல்லியில் தோல்வி குறித்து பேசிய ஆம் ஆத்மி எம்.பி.,

மக்களவைக்கு பாஜகவையும், சட்டசபைக்கு ஆம் ஆத்மியையும் தேர்வு செய்வதை டெல்லி மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அக்கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டெல்லியில் இம்முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வென்றுள்ளது. அதே நேரம் பஞ்சாப்பில் அதன் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
Similar News
News December 4, 2025
புடின் விமானத்தின் பிரமிக்க வைக்கும் அம்சங்கள்

ரஷ்ய அதிபருக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது தான் ‘Flying Kremlin’ விமானம். இதில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, ரேடார் – ஜாமிங் டெக்னாலஜி, வானில் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதல்களுக்கான உத்தரவு பிறப்பிக்கும் கட்டளை மையம் என பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜிம், பெட்ரூம், சமையலறை என Kremlin மாளிகையில் இருப்பதை போன்ற சொகுசு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
News December 4, 2025
வீட்டில் இருந்தே செய்யலாம்.. தமிழக அரசு அறிவிப்பு

இனி பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்க தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வதற்கு ‘ஸ்டார் 3.0’ திட்டம் மூலம் புதிய மென்பொருளை அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய முறையில், சொத்து வாங்குவோர், விற்போர் அவர்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு OTP வரும். இதனை பதிவு செய்த பிறகு விரல் ரேகையை பதிவு செய்து பத்திரத்தை பதிவு செய்துகொள்ளலாம். SHARE IT.
News December 4, 2025
BREAKING: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த TN அரசு

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30 மணிக்குள் தீபத்தை ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், இப்போது SC-யில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


