News March 28, 2024
ஆடுஜீவிதம், ஜோஷ்வா படங்கள் வெளியாகின

*பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ (The Goat Life) திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சுமார் 14 வருட உழைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
*அதே போல், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண், கிருஷ்ணா மற்றும் திவ்ய தர்ஷினி நடித்துள்ள ‘ஜோஷ்வா’ திரைப்படம், அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது.
Similar News
News January 3, 2026
காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 3, 2026
ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம் என்ன?

ஜனநாயகன் பட வசூலில் 75%-80% வரை விநியோகஸ்தர்கள் கேட்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், TN-ல் 60% தியேட்டர்களில் JN வெளியிடவே விரும்புகின்றனர். ஆனால் கேரளாவில் 60% கேட்கும் நிலையில், TN-ல் 75% கேட்கிறார்கள். இதுதான் ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம். இதை விஜய்யின் காதுக்கு கொண்டு சென்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
NZ-க்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

NZ-க்கு எதிரான ODI தொடருக்கான IND அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்னஸை பொறுத்து ஸ்ரேயஸ் அணியில் இடம்பெறுவார். அதேபோல், ஃபிட்னஸ் டெஸ்ட்டை கிளியர் செய்யாததால் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. SQUAD: *கில் (C) *ரோஹித் *கோலி *KL ராகுல் *ஸ்ரேயஸ் (VC)*வாஷிங்டன் சுந்தர் *ஜடேஜா *சிராஜ் *ஹர்ஷித் ராணா *பிரசித் கிருஷ்ணா *குல்தீப் *பண்ட் *நிதிஷ்குமார் *அர்ஷ்தீப் சிங் *ஜெய்ஸ்வால்.


