News December 6, 2024

திமுகவை அட்டாக் செய்த ஆதவ் அர்ஜுனா

image

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிகவின் ஆதவ் அர்ஜுனா, மேடையில் திருமா இல்லாவிட்டாலும், அவர் மனசாட்சி இங்குதான் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை, மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மறைமுகமாக திமுகவை விமர்சித்த அவர், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக உருவாக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

ஹீரோ லோகேஷ் படத்தில் 2 ஹீரோயின்கள்

image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன், லோகேஷுக்கு ஜோடியாகவும், இன்னொரு நாயகியாக சுதா என்பவரும் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்காக லோகேஷ் தாய்லாந்தில் தற்காப்பு கலைகளை கற்றார்.

News August 29, 2025

ராசி பலன்கள் (29.08.2025)

image

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – ஆதாயம் ➤ மிதுனம் – போட்டி ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – வெற்றி ➤ தனுசு – ஆதரவு ➤ மகரம் – பரிசு ➤ கும்பம் – நிம்மதி ➤ மீனம் – உயர்வு.

News August 29, 2025

சிறிய கட்சிகளுக்கு ₹4,300 கோடி நன்கொடை

image

குஜராத்தில் 10 சிறிய கட்சிகள், கடந்த 5 ஆண்டுகளில் ₹4,300 கோடி நன்கொடை பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளும் சேர்த்து ₹39.02 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டிய நிலையில், தணிக்கை அறிக்கையில் ₹3,500 கோடி செலவிட்டதாக கட்சிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை ECI விசாரிக்குமா (அ) சத்திய பிரமாணம் கேட்பதோடு முடித்துக் கொள்ளுமா என ராகுல் வினவியுள்ளார்.

error: Content is protected !!