News March 28, 2025

புலியிடம் வம்பிழுக்கும் ‘ஆடு’: ஆதவ் கிண்டல்

image

தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். திமுகவுக்கு எதிராக பிரச்னைகள் கிளம்பும்போது, அதை திசைதிருப்புவதே அண்ணாமலையின் வேலை என அவர் கூறினார். மேலும், நமது தலைவர் (விஜய்) புலியை போல அமைதியாக இருக்க, திடீரென ஒரு ஆடு வந்து ஆட்டம் போடுவதாகவும், நமது தலைவரை விமர்சிக்கும் பெயரில், மறைமுகமாக ஒரு பெண்ணை கேவலமாக பேசுகிறது அந்த ஆடு எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

Similar News

News March 31, 2025

ஏன் 9வது வரிசையில் வருகிறார் தோனி?

image

CSK என்றால் தோனி தான் என்ற நிலை மாறி, பல CSK ஃபேன்ஸ் அவர் மீது ஆதங்கத்தைக் கொட்ட தொடங்கிவிட்டனர். தோனிக்கு மேனேஜ்மென்ட் கொடுத்த சுதந்திரத்தால் தான் அவர், 9வது வரிசையில் களமிறங்குகிறார் என்கின்றனர் சிலர். பயிற்சியாளர் ஃப்ளெமிங், தோனிக்கு முன்பு இருந்ததை போல, உடல் ஒத்துழைக்காததால், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்கிறார். நடப்பு தொடரில் CSK பேட்டிங்கில் தடுமாறுவதை காண முடிகிறது தானே?

News March 31, 2025

கள்ளநோட்டு விவகாரம்: விசிக நிர்வாகி செல்வம் நீக்கம்

image

கள்ளநோட்டு விவகாரத்தில் சிக்கிய விசிகவின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் பரம.செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தில் செல்வத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து ₹85,000 கள்ளநோட்டுகள், பிரிண்டிங் மெஷின், பணம் எண்ணும் இயந்திரங்கள், போலீஸ் சீருடைகள், பிஸ்டல் ஏர்கன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் இன்று காலை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

News March 31, 2025

₹800 பீஸ்-காக பறிபோன பள்ளி மாணவியின் உயிர்!

image

உ.பி.யின் பிரதாப்கர் மாவட்டத்தில் ₹800 செலுத்தாததால் 9 ஆம் வகுப்பு மாணவியை, பள்ளி நிர்வாகம் ஒரு தேர்வை எழுத அனுமதிக்கவில்லை. இதனால், மனமுடைந்து போன அம்மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது, தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகியோர் தனது மகளை அவமானப்படுத்தியதாக தாயார் குற்றம் சாட்டியுள்ளார். மனதில் கொள்ளுங்கள் மரணம் எதற்கும் முடிவல்ல!

error: Content is protected !!