News May 7, 2025
‘ஆதார்’ குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல: மத்திய அரசு

அரசின் அடையாள அட்டைகளான ஆதார், பான், ரேஷன் ஆகியவை குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டில் தங்கிய பலரும் இந்த அட்டைகளை வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்றுகளை குடியுரிமைக்கான சான்றாக சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
கிருஷ்ணகிரி: லாரியின் கிரெய்ன் விழுந்ததால் ஒருவர் பலி!

கிருஷ்ணகிரி-குப்பம் ரோட்டில் டாரஸ் லாரி கிரெய்ன் ஒன்றை, நேற்று (நவ.30) ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் கந்திகுப்பம் அருகில் உள்ள காளி கோயில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது வளைவில் மிகவேகமாக வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது, கிரைன் பெல்ட் அறுந்து கிரைன் கீழே சரிந்து விழுந்தது. இதில் அருகில் சென்ற ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News December 1, 2025
ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 1, 2025
BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.


