News November 19, 2024

ஆதார் கார்டு போதும்.. ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் ஃப்ரீ

image

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டை இலவசமாக பெற முடியும். எவ்வளவு வருமானம் பெறுபவராக இருந்தாலும் இந்தக் காப்பீடு கிடைக்கும். ஆதார் அட்டை உள்ள அனைவரும் இந்த ஆயுஷ்மான் அட்டைக்கு (AYUSHMAN CARD) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆயுஷ்மான் செயலியை டவுன்லோடு செய்து இதில் இணையலாம்.

Similar News

News November 19, 2024

நவ. 24 அனைத்துக் கட்சிக் கூட்டம்

image

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 24ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு அனைத்துக் கட்சியினரிடமும் இக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கும்.

News November 19, 2024

INDW-AUSW: இந்திய அணி அறிவிப்பு

image

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. அணி ஹர்மன்ப்ரீத் (C), மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா, ஹார்லின் தியோல், யாஷிகா பாடியா(w), ரிச்சா கோஷ்(w), தேஜல் ஹசப்னிஸ், தீப்தி, மின்னு மனி, பிரியா மிஷ்ரா, ராதா யாதவ், டைட்டஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேனுகா, சைமா தாகோர்.

News November 19, 2024

இறந்த பாகனை எழுப்ப முயன்ற தெய்வானை!

image

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை பாகனின் உறவினர் சிசுபாலன், நீண்டநேரம் தொட்டபடி செல்ஃபி எடுத்துள்ளார். புதிய நபர் தன்னை தொடுவதை விரும்பாத தெய்வானை, அவரை தாக்கியுள்ளது. அதை தடுக்க வந்த பாகனையும் தாக்கி இருக்கிறது. பின்னர், பாகனை தாக்கி விட்டோமே என்ற வேதனையில் அவரை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால் அவர் எழுந்திருக்காததால் கோபத்தில் மீண்டும் சிசுபாலனை தாக்கியதாக யானை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.