News January 13, 2025

தலையை வாடகைக்கு விடும் யூ-டியூபர்!

image

வழுக்கை விழுந்துவிட்டதே என வருந்தும் நபர்களுக்கு மத்தியில், அதனை எப்படி ஆதாயமாக மாற்ற முடியும் என யோசித்து இருக்கிறார் கேரளாவை சேர்ந்த ஷபீக் ஹசீம். தனது தலையை விளம்பரப் பலகையாக, வாடகைக்கு விட முடிவுசெய்து, அதனை அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளார். YouTube Travel Vlogger ஆன ஷேக்கின் சேனலுக்கு, 28k ஃபாலோயர்ஸ் உள்ளனராம். இதனால் ரீச்சும் அதிகமாக இருக்கும் என்கிறார். ஐடியா எப்படி? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News December 8, 2025

BREAKING: கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய பரிந்துரை

image

திமுக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய ED பரிந்துரை செய்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் ₹1,020 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நேரு மீது FIR பதிவு செய்து, விசாரனை நடத்த தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு 252 பக்க ஆவணங்களை ED அனுப்பியுள்ளது.

News December 8, 2025

ஹைதராபாத்தில் டொனால்ட் டிரம்ப் சாலை!

image

ஹைதராபாத்தில், USA துணை தூதரகம் அமைந்துள்ள உள்ள சாலைக்கு ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என பெயரிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமைவெளி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயர் சூட்டப்பட உள்ளது. ஏற்கெனவே சாலைகளுக்கு <<18292123>>கார்பரேட் நிறுவனங்களின்<<>> பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக CM ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தன் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

இந்து, இந்தியா என பிரித்து பேசலாமா? சீமான்

image

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!