News March 28, 2024
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட இளம்பெண்

பியூட்டி பார்லரில் அடிக்கடி Hair Straightening செய்ததால் 26 வயது இளம் பெண்ணின் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடியை நேராக்கப் பயன்படுத்தப்படும் அமிலங்கள் இளம் பெண்ணின் உடலில் நுழைந்து சிறுநீரகத்தை பாதித்ததாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அழகை மெருகேற்ற தற்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பு எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Similar News
News March 26, 2026
தங்கம் விலை ₹10,000 குறையும்.. வெளியான கணிப்பு!

தற்போதைய சூழலில் தங்கம் வாங்குவது சிறந்தது என நிதி ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். ஈரான் போர் காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை மேலும் குறையும் என்ற அவர், பெரிய போராக மாறினால் 1 கிராம் தங்கம் விலை ₹10,000 வரைக்கும் கூட குறையும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் சவரனுக்கு 30,000 வரை குறைந்த தங்கம் விலை, தற்போது ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இன்று <<19479471>>1 கிராம் ₹13,670<<>>.
News March 26, 2026
புதுச்சேரி வேட்பாளர்களை அறிவித்த திருமா

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையிலும், காங்., கட்சியினர் வேட்புமனுவை வாபஸ் வாங்கவில்லை. இதனால், புதுவை காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ள திருமா, ஊசுடு தொகுதியில் – பெ.அரியபுத்ரி, நெட்டப்பாக்கம் – அமுதவன், உழவர்கரை – புஷ்பலதா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
News March 26, 2026
அரிதினும் அரிதான போட்டோ.. இவ்வளோ ஸ்பெஷலா!

இந்த போட்டோவில் என்ன ஸ்பெஷல் என கேட்கலாம். இதுதான் ‘Wildlife Photographer of the Year- 2026’ என்ற விருதை Josef Stefan என்பவருக்கு வென்று கொடுத்துள்ளது. போட்டோவில் உள்ள பூனை சிவிங்கிப் என்ற மிகவும் அரிய பூனை இனத்தை சேர்ந்ததாம். அந்த பூனை தான் வேட்டையாடிய எலியை காற்றில் தூக்கிப் போட்டு கேட்ச் பிடிக்கும் அரிய காட்சி கரெக்ட்டாக கிளிக் செய்யப்பட்டதே இதன் சிறப்பு. எப்படி இருக்கு இந்த போட்டோ?


