News March 17, 2025
கல்யாணம் செய்ய மறுத்த காதலியை கொன்ற இளைஞர்!

போலீஸ் அதிகாரியாகும் கனவில் இருந்த இளைஞர் காதல் விவகாரத்தால் தற்போது கம்பி எண்ணி வருகிறார். தி.மலை கலசபாக்கத்தில் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த ரோஷினி – சக்திவேலுக்கு காதல் மலர்ந்துள்ளது. ரோஷினி திடீரென சக்திவேலிடம் இருந்து விலகி வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், ரோஷினியை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளார்.
Similar News
News March 18, 2025
KYC அப்டேட்.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்யும் கேஒய்சி (KYC) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியாக KYC படிவங்களை கேட்டு வாடிக்கையாளர்களை வங்கிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவுறுத்தியுள்ளார்.
News March 18, 2025
தமிழ்நாட்டை முந்தும் தெலங்கானா

தெலங்கானாவில் BC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றியிருக்கிறது அம்மாநில அரசு. இந்தியாவில் தமிழ்நாடு(69%) தவிர, எந்த மாநிலத்திலும் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு கிடையாது. அதனை முறியடிக்கும் வகையில், மொத்த இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி. அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி அவர் இதனை செய்திருக்கிறார்.
News March 18, 2025
அதனால்தான் அவர் தோனி: ஹர்பஜன்

40 வயதைத் தாண்டிய பிறகும், தோனி சிறப்பாக விளையாடுவதற்கு, கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடுதான் காரணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த வயதில் ஐபிஎல்லில் விளையாட ஃபிட்னஸ் வேண்டும் எனவும், அதற்கு தோனி கடுமையாக உழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தினமும் 2-3 மணி நேரம் தோனி பேட்டிங் பிராக்டிஸ் செய்வதாகவும், அதுதான் மற்ற வீரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.