News March 10, 2025

ஒரே நாளில் ஒர் ஆண்டுக்கான மழை… 13 பேர் பலி

image

அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன்தினம் புயலோடு கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளத்தில் வீடுகள், ஹாஸ்பிடல்கள் மிதப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன.

Similar News

News March 10, 2025

கல்வி ஞானத்தை வழங்கும் ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

image

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்.

பொருள்:

ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.

News March 10, 2025

சமையலுக்கு உகந்த எண்ணெய் எது?

image

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை தற்போது பூதாகரமாகியுள்ளது. அதிலும் குழந்தைகள் மத்தியில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூட, எண்ணெய் அளவை 10% குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு தீர்வு இருக்கிறது. நம்ம ஊரை பொறுத்தவரை நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தான். ஆகவே அதை யூஸ் பண்ணுங்க. பொரித்த எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தவே கூடாது. That’s All.

News March 10, 2025

2 வாரங்களுக்கு பிறகு ஒருவர் உடல் மட்டும் கண்டெடுப்பு

image

தெலுங்கானா, நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கத்தை தோண்டும்போது அதன் மேற்பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கினர். கடந்த 2 வார கால மீட்புப் பணியில் 11 தேசிய அளவிலான மீட்பு குழுவினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு தொழிலாளரின் உடல் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு அவரின் குடும்பத்துக்கு ₹25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!