News April 7, 2025
20 முறை திருமணமாகியும் கன்னியாகவே இருக்கும் பெண்!

குழப்பமாக இருக்கிறதா? தன்னை ’லைப் ஆக்ட்ரஸ்’ எனக் கூறும், சீனாவின் Cao Mei, திருமணம் செய்வதை ஒரு பிசினஸாக்கி இருக்கிறார். திடீரென திருமணம் நிற்கிறது. வேறொரு பெண்ணை ரெடி பண்ணி, மானத்தை காப்பாத்திக்கணும் என்றால், இவரைத் தொடர்பு கொண்டால் போதும். மணப்பெண்ணாக வந்து, போஸ் கொடுத்துவிட்டு சென்று விடுவார். ஆனால், அவர் தொடுவதை அனுமதிப்பதில்லை. இதற்காக, அவர் 1,500 யுவான் (₹18,000) பில்லும் போடுகிறார்.
Similar News
News April 9, 2025
குமரியில் பிறந்த அரசியல் இமயம்!

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் 1933, மார்ச் 19ல், சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன், தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் குமரி அனந்தன். இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். அரசியலில் ஆர்வம் அதிகரிக்க, காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். பனைமரத் தொழிலாளர் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவரது மறைவு அரசியல் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #RIP
News April 9, 2025
மிக மோசமான ரெக்கார்ட் நெருங்கும் CSK?

தொடர்ந்து 4 மேட்சில் தோற்று, பரிதாபமான சூழலில் CSK உள்ளது. இதே சூழலை முன்னரே ஒரு முறை CSK சந்தித்துள்ளது. 2022ல், 4 மேட்சில் வரிசையாக CSK தோற்றது. ஆனால், 5-வது மேட்சில் வென்றது. அந்த வருடம் தான் IPL வரலாற்றில் CSK-வின் மிக மோசமான ஆண்டு. ஆனால், இதுவரை 5 மேட்சில் தொடர்ச்சியாக CSK தோற்றது இல்லை. அடுத்து KKRயுடன் நடக்கும் மேட்சிலாவது வென்று, இந்த மோசமான ரெக்கார்ட்டை தவிர்க்குமா CSK?
News April 9, 2025
பிரபல தயாரிப்பாளர் காலமானார்

மூத்த பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் (87) நேற்று நள்ளிரவு காலமானார். உடல்நலக் குறைபாடு காரணமாக மும்பையில் உள்ள திருபாய் அம்பானி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். ராணி முகர்ஜி, தமன்னா போன்ற நட்சத்திர நாயகிகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அவர் அமீர் கான், பாபி தியோல், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.