News September 14, 2025
மடியில் குழந்தையுடன் DSP இன்டர்வியூ வந்த பெண்!

தாய் பாசத்தை வெல்ல இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவமும் சான்று. ம.பி.யின் Public Service Commission நேர்காணலில், வர்ஷா படேல் தனது 20 நாட்களே ஆன குழந்தையை மடியில் தாங்கியபடி பங்கேற்றுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது தேர்வெழுதி 11-வது ரேங்க் பிடித்த வர்ஷா, குழந்தையுடனே நேர்காணலை சந்தித்தார். தாயாகிய உறுதியும், பெண்மையின் சக்தியும் ஒருசேர அவர் DSP-யாக தேர்வாகி இருக்கிறார்.
Similar News
News September 14, 2025
போன் Airplane Mode-ல் இவ்வளோ நன்மைகள் இருக்கா?

✧Dry ஆகும் நேரத்தில், சீக்கிரமாக போன் ஆப் ஆகாமல் இருக்க Airplane mode உதவும். ✧சீக்கிரமாக Charge ஏற, Airplane Mode ஆன் செய்துட்டு, Charge போடுங்க. ✧இந்த ஆண்ட்ராய்டு ஜெனரேஷனில் கவனம் சிதறலை தடுக்க, Airplane Mode உதவும். இன்டர்நெட் தடைபடுவதுடன், தேவையற்ற கம்பெனி அழைப்புகளும் நிறுத்த இது உதவுகிறது. ✧Airplane Mode மூலம் போனின் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் கூறுகின்றனர். SHARE IT.
News September 14, 2025
திருமண பரிசுகளுக்கும் வரி உண்டு

திருமணத்தன்று பெறப்படும் பரிசு பொருள்கள், சொத்து, தங்கம், வெள்ளி என எதுவாயினும் அதற்கு வரி கிடையாது. திருமணத்திற்கு முன்போ பின்போ நண்பர்கள், உறவினர்கள் மூலம் பெறப்படும் பரிசுகள் ஒரே ஆண்டில் ₹50,000-க்கு அதிகமாக இருந்தால் வரி செலுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் (அ) பின் இருதரப்பு பெற்றோர், உடன்பிறந்தவர்களிடமிருந்து பெறும் பரிசுகளுக்கு வரி செலுத்த தேவையில்லை. Wedding Couples-க்கு ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

நாக்பூரில் 36 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட பெண், மீண்டும் உயிருடன் வந்துள்ளார். 1989-ல் அவர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைத்து, ஆண்டுதோறும் குடும்பத்தினர் துக்கம் அனுசரித்து வந்துள்ளனர். இந்நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. மும்பை காப்பகத்தில் இருந்த அந்த பெண்ணை சமூக சேவகர்கள் குடும்பத்துடன் சேர்த்துள்ளனர்.