News April 11, 2024

சற்றுமுன்: “திமுகவுக்கு படுதோல்வி தான்”

image

பிரதமர் மோடியை நோக்கி கேள்வி கேட்டு தன்னை முன்னிலைப்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று எல்.முருகன் விமர்சித்துள்ளார். பிரதமர் மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் வரும் தேர்தலில் திமுகவுக்கு டெபாசிட் கூட மிஞ்சாது; படுதோல்வி அடையும் எனக் கூறிய அவர், மெட்ரோ திட்ட மதிப்பீடு குறித்த ஆய்வு பணி முடிந்தபின் விரைவாக நிதி அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

Similar News

News January 16, 2026

திருச்செந்தூரில் குத்திக் கொலை

image

திருச்செந்தூர் அருகே வீரராகவுபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை வாசன். தனியார் விடுதி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவருக்கும், இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவருக்கும் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கிராஜா கத்தியால் ஏழுமலை வாசனின் கழுத்தில் குத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 16, 2026

பொங்கல் பரிசு: தங்கம் விலை குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,260) குறைந்து $4,600-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் சுமார் $300 அதிகரித்த தங்கம் இன்று சரிவைக் கண்டுள்ளது. தை பிறந்துள்ளதால், சுப முகூர்த்த விழாவுக்காக நகைகள் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்திய சந்தையில் இன்று கணிசமான அளவு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

News January 16, 2026

ELECTION: ராமதாஸ் முன் உள்ள 3 வாய்ப்புகள் இதுதான்!

image

NDA கூட்டணியில் அன்புமணி சேர்ந்துவிட்டதால், ராமதாஸுக்கு இன்னும் 3 வாய்ப்புகளே உள்ளன. 1.திமுக அல்லது தவெக கூட்டணியில் சேர்ந்து அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவது. 2. தனித்து களம் காண்பது. 3.அன்புமணியை சமாதானப்படுத்தி அதிமுக அணியில் ஒற்றை இலக்க தொகுதிகளை பெறுவது. வரும் தேர்தலில் எந்த அணி அதிக MLA-க்களை வெல்லுமோ, அந்த அணியே பாமகவை கைப்பற்றும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!