News August 17, 2024
இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிடுபவரா?

இரவில் கோதுமை சப்பாத்தியை சாப்பிடலாமா, கூடாதா என சந்தேகம் இருக்கும். அதற்கு உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கும் விளக்கத்தை காணலாம். கோதுமை சப்பாத்தியில் கலோரிகள், கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும் என்றும், அதை இரவில் சாப்பிட்டால் செரிமானம் ஆக அதிக நேரமாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஜீரண பிரச்னை ஏற்படும் என்பதால், இரவு உணவாக சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News September 18, 2025
ராகுல் போலி கதைகளை பரப்புகிறார்: அமித்ஷா

வாக்கு திருட்டு குறித்து பொய்யான கதையையே ராகுல் பரப்பி வருவதாக அமித்ஷா சாடியுள்ளார். பிஹாரில் பேசிய அவர், ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த காங்கிரஸாரும், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை காப்பாற்றும் வேலையிலேயே ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், இந்திய இளைஞர்களுக்கு பதில், ஊடுருவல்காரர்களுக்கு ராகுல் வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News September 18, 2025
விஜய்யை எதிர்த்தால் திமுகவின் கைக்கூலியா? சீமான்

அனைத்து கட்சிகளையும் தான் பாரபட்சமின்றி விமர்சித்து வருவதாக சீமான் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், விஜய்யை எதிர்த்தால் திமுக கைக்கூலி, திமுகவை எதிர்த்தால் RSS கைக்கூலி என மாறி மாறி தன்னை விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், திமுக தேர்தலில் தனித்து நிற்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 18, 2025
தள்ளிப்போகும் ரஜினி, கமல் படம்

ரஜினி, கமல் இணைந்து நடிக்கவுள்ள படம் மீதான எதிர்பார்ப்பே கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. இந்நிலையில், ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ஆகியோரது இயக்கத்திலேயே கமல் முதலில் நடிக்கவுள்ளாராம். இதன்பிறகே கமல், ரஜினி இருவரும் நடிக்கும் படம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் இயக்குநர், சரியான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளதாம்.