News February 28, 2025
மரணத்தை முன்னரே சொல்லும் கிணறு!

வாரணாசி காசி விஸ்வநாத் கோவிலுக்கு அருகில் சித்தேஸ்வரி மந்திர் வளாகத்தில், சந்திரனால் உருவானதாக நம்பப்படும் ‘சந்திரகூப்’ என்ற கிணறு உள்ளது. இது, மரணத்தை முன்னரே வெளிப்படுத்தும் சக்தி கொண்டது என பக்தர்கள் நம்புகிறார்கள். இந்து புராணங்களின் படி, யாராவது இக்கிணற்றைப் பார்த்து, அவர்களின் பிரதிபலிப்பு அதில் தெரியவில்லை என்றால், அடுத்த 6 மாதங்களில் அவர்கள் மரணிப்பார்கள் என நம்பப்படுகிறது.
Similar News
News February 28, 2025
பொதுத்தேர்வில் கிரிக்கெட் கேள்வி

பத்தாம் வகுப்பு CBSE (இந்தி) பொதுதேர்வில் மாணவர்களுக்கு கிரிக்கெட் குறித்து கேட்கப்பட்ட கேள்வி கவனத்தை ஈர்த்துள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதுகுறித்து, விரிவாக கட்டுரை எழுதச்சொல்லி பொதுத்தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பார்க்காத மாணவர்கள் எப்படி எழுதுவார்கள் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News February 28, 2025
BREAKING: இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,414. புள்ளிகள் சரிந்து 73,198ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி குறியீடு 420 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 22,124ஆக வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீடுகளை வெளிநாட்டினர் தொடர்ந்து திரும்பப் பெறுவது உள்ளிட்டவையே சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
News February 28, 2025
ரூ.50,000 கல்வி உதவித் தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கையை மேம்படுத்துவதற்காக AICTE சார்பில் தகுதியுடைய மாணவர்களுக்கு ‘யசஸ்வி’ திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் வங்கிக்கணக்கில் ரூ.50,000, ‘சரஸ்வதி’ திட்டத்தின்கீழ் ரூ.25,000 செலுத்தப்படுகிறது. இந்த 2 உதவித் தொகைக்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆதலால் https://scholarships.gov.in இணையதளத்தில் இன்றே விண்ணப்பிங்க. இந்தத் தகவல்களை நண்பர்களுக்கும் பகிருங்க.