News June 29, 2024
₹1,16,000க்கு விற்பனையாகும் தண்ணீர் பாட்டில்

ஜப்பானில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் ₹1,16,000 விற்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிலிகோ ஜூவல்லரி வாட்டர் கம்பெனி தயாரித்துள்ள இந்த வாட்டர் பாட்டில், ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் உள்ள நீர், ரோக்கோ மலையில் இருந்து பெறப்படுவதாகவும், அதன் ஆக்ஸிஜன் அளவு மற்ற நீரில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News September 19, 2025
ஆயுதப் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்: மாவோயிஸ்டுகள்

ஆபரேஷன் ககர் மற்றும் என்கவுண்டர் நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தினால், ஆயுதப் போராட்டத்தை கைவிட தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் (அபய்) பெயரில் கடிதம் வெளியானது. இந்நிலையில், மாவோயிஸ்ட் செய்தி தொடர்பாளர் ஜெகன் வெளியிட்டுள்ள கடிதத்தில், அபய் அப்படி சொன்னது தனிப்பட்ட விஷயம். நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். அம்மாதிரியான முறைகள் இயக்கத்தை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்த ஹெச்.வினோத்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ குறித்து ரசிகர்களுக்கு ஹெச்.வினோத் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். ‘ஜனநாயகன்’ விஜய் சாருக்கான பக்கா ஃபேர்வல் படமாக அமையும் என்றும் படத்தில் மாஸ், கமர்ஷியல், ஆக்ஷன் ஆகியவற்றை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறினார். மேலும், பொங்கலுக்கு வெளியாகும் இப்படம் கம்ப்ளீட் மீல்ஸாக இருக்கும் என்று வினோத் தெரிவித்துள்ளார். யாரெல்லாம் ஜனநாயகனுக்கு ஆவலோடு வெயிட்டிங்?
News September 19, 2025
பும்ரா இல்லை.. இது தான் இந்தியாவின் பிளேயிங் 11

ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிரான போட்டியில் பும்ரா, வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியின் இந்திய பிளேயிங் 11 விவரம் : சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ராணா, அர்ஷ்தீப் சிங். இது இந்திய அணிக்கு 250-வது டி20 போட்டியாகும்.