News November 16, 2024

ரயில்வேயின் சிறப்பு வசதிக்கு எகிறும் வரவேற்பு

image

ரயிலின் AC முதல் வகுப்பு பெட்டிகளில் செல்லப் பிராணிகளை அழைத்து செல்லும் வசதியை, கடந்த மே மாதம் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், பயணத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே செல்லப் பிராணிகளை ரயில் நிலையம் அழைத்துச் சென்று, அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்தியதற்கான சான்றிதழ்களை காண்பித்தல் அவசியமாகும்.

Similar News

News April 2, 2026

போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு ஈரான் உறுதியளித்துள்ளது. நமது இந்திய நண்பர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது. போர் காரணமாக 19 எண்ணெய்க் கப்பல்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் அங்கு சிக்கியுள்ளனர். மத்திய அரசின் ராஜாங்க ரீதியான நடவடிக்கையால் சில கப்பல்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளன.

News April 2, 2026

அபிஷேக் சர்மாவை கேப்டனாக்காதது ஏன்? யுவராஜ்

image

SRH கேப்டன்சியை அபிஷேக் சர்மாவுக்கு வழங்காததற்கு யுவராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 7 சீசன்களாக SRH அணிக்காக சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் விளையாடி வரும் அவருக்கு, நிச்சயமாக கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என யுவி கூறியுள்ளார். பஞ்சாப் மாநில அணிக்கு அவர் கேப்டனாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நடப்பு சீசனில் SRH அணியை இஷான் கிஷன் வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2026

அது ஹீரோயின் அல்ல, ஹெராயின்: நயினார்

image

ஒரு பாட்டுக்காக ஓட்டு வந்துவிடும் என திமுக கருதுகிறது என்றால், மக்களை எப்படி பார்க்கிறது என்று தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் TN-ல் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள் முன் மிட்டாய் விற்ற காலம் போய், இப்போது கஞ்சா விற்கிறார்கள் என சாடியுள்ளார். இந்நிலையில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை என்பது ஹீரோயின் அல்ல அது ஹெராயின் என்று விமர்சித்துள்ளார்..

error: Content is protected !!