News November 23, 2024
திசை மாறும் போர்: புதின்

உக்ரைனுடனான போர் திசை மாறுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், இந்தப் போர் உலகளாவிய மோதலை நோக்கி விரிவடைந்து வருகிறது என்றார். மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்தால் தீர்க்கமாக பதிலளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் 3ஆவது ஆண்டை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 5, 2025
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளமான www.pmfby.gov.in என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக தலைவர்கள்

அதிமுக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களை தொடர்ந்து மருது அழகுராஜ், தற்போது மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஓபிஎஸ் உடன் இருக்கும் தஞ்சையை சேர்ந்த முக்கிய தலைவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 5, 2025
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும் என IMD கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது குடையை எடுத்துக் கொள்ளவும்.


