News June 26, 2024
சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு

சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தக் கோரி பேரவையில் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக பேச கோரிக்கை விடுத்தும், அதற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறி பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News September 18, 2025
திருவாரூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
கையில் Bitcoin.. 12 அடிக்கு டிரம்ப்பின் சிலை!

கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் US அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முதலீட்டாளர்கள் 12 அடி உயர சிலை அமைத்துள்ளனர். வாஷிங்டன் DC-யில் அமைந்துள்ள அமெரிக்க கேபிடல் கட்டடத்திற்கு வெளியே அமைந்துள்ள இந்த சிலையில், டிரம்ப் தனது கையில் Bitcoin-ஐ ஏந்தியுள்ளார். வெள்ளி மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 18, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹50 குறைந்து ₹10,220-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை, மீண்டும் குறைய தொடங்கியதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.